Loading...
 

பொது நலன் கிளப்புகள்

 

பொது நலன் கிளப்புகள்

ஒவ்வொரு வழக்கின் அடிப்படையிலும் Agora Speakers International உறுப்பினருரிமை பெறுவதில் சில கட்டுப்பாடுகளைக் (நிபந்தனைகளைக்) கொண்ட ஒரு கிளப்பை நியமிக்கலாம், ஆனால் இது பொது நலன் கிளப் (PIC) ஆக பொது நல சேவைகளை வழங்குகிறது. இந்தக் நிபந்தனைகள் அனுமதிக்கப்படாவிட்டாலும் இது நிகழலாம்.

பொது நலன் கிளப்புகள் Agora Speakers International-க்கு எந்த கட்டணத்தையும் செலுத்துவதில்லை, ஆனால் அவற்றின் குறிப்பிட்ட தன்மை காரணமாக உறுப்பினருரிமை மற்றும் வருகை இரண்டையும் கட்டுப்படுத்தலாம்.

பொது நலன் கிளப்புகளின் சில எடுத்துக்காட்டுகள் இதோ இங்கே:

  • அரசு ஊழியர்களின் வருகையை கட்டுப்படுத்தும் அரசு அமைப்புகளில் உள்ள கிளப்புகள்.
  • மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும்/அல்லது பெற்றோரின் வருகையை கட்டுப்படுத்தும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள கிளப்புகள்.
  • மருத்துவமனைகள், குழந்தை பராமரிப்பு மையங்கள், பயணிகளுக்கான தங்கும் இடங்கள், அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் போன்றவற்றில் உள்ள கிளப்புகள்.
  • சிறைச்சாலைகளில் உள்ள கிளப்புகள்.

பொதுவாக, பொது நலன் கிளப்பானது அந்தக் கிளப்பை நடத்தும் நிறுவனத்தின் இடத்தில் சந்திக்க வேண்டும், ஏனெனில் இது போன்ற ஒரு கிளப்பைக் கொண்டிருப்பது நிறுவனத்தின் ஆர்வத்தினாலேயே என்று கருதப்படுகிறது. எனவே நிறுவனமானது சந்திப்பிற்கான இட வசதியை  வழங்க தயாராக இருத்தல் வேண்டும். உதாரணமாக, கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டுமேயான ஒரு கிளப் NY இல் உள்ள ஒரு பப்பில் சந்தித்தால் அதனால் PIC அந்தஸ்தை பெற முடியாது.

கிளப் உறுப்பினர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய வழக்குகளில் அல்லது வெளி உலகத்துடன் தொடர்பு கொள்வதிலிருந்து தடைசெய்யப்பட்ட சூழல்களைத் தவிர்த்து (எடுத்துக்காட்டாக, உடல்நலம் அல்லது பாதுகாப்பு காரணங்களுக்காக), அனைத்து PIC-களும் நேரடியாக தவறாமல் சந்திக்க வேண்டும் (எப்போதாவது ஆன்லைன் சந்திப்புகள் அனுமதிக்கப்படுகின்றன). மேற்கண்ட உதாரணத்தைத் தொடர்ந்து, கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஆன்லைன் கிளப்பினால் PIC அந்தஸ்தை பெற முடியாது.

பொதுவாக, கிளப்பை நடத்தும் அமைப்பு பாகுபாடற்றதாகவும், Agora உடைய துணை விதிகளுக்கு இணக்கமாகவும் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க (ஒற்றை பாலின சிறைச்சாலையில் உள்ள ஒரு கிளப் அல்லது உள்நாட்டு வன்முறையிலிருந்து தப்பிப்பிழைப்பவர்களுக்கான ஆதரவு குழு போன்ற விதிவிலக்குகள் இருக்கலாம் என்றாலும்).

பதிவு செய்யும் செயல்முறை

பி.ஐ.சி அந்தஸ்தைக் கோர, கிளப்பை முதலில் நிபந்தனைகள் உடைய கிளப்பாக பதிவுசெய்க, அதில் நீங்கள் PIC அந்தஸ்தை பெற விண்ணப்பிக்க விரும்புகிறீர்கள் என்பதைக் குறிக்கவும்.

கிளப்பை நடத்தும் அமைப்பின் வகையைப் பொறுத்து, நீங்கள் பின்வரும் ஆவணங்களை மின்னணு முறையில் எங்களுக்கு அனுப்ப வேண்டும்:

  • அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்ட பொது நலன் கிளப்பை (PIC -ஐ) பொறுத்தவரையில்:
    • கிளப்பின் முழு பெயர், முழுமையான முகவரி மற்றும் கிளப்பை நடத்தும் நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி.
    • கிளப்பின் சந்திப்பு வளாகம் (குறிப்பிட்ட கட்டிடம் மற்றும் அறை உட்பட) நிறுவனத்தின் எல்லையில் இருக்க வேண்டும்.
  • அரசாங்க அமைப்புகள், சுகாதார நிறுவனங்கள், குழந்தை பராமரிப்பு மையங்கள், பயணிகளுக்கான தங்கும் இடங்கள், அனாதை இல்லங்கள், முதியோர் குடியிருப்புகள் மற்றும் சிறைச்சாலைகளை போன்றவற்றில் உள்ள PIC -ஐ பொறுத்தவரையில்:
    • கிளப்பின் முழு பெயர், முழுமையான முகவரி மற்றும் கிளப்பை நடத்தும் நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி.
    • நிறுவனத்தின் வலைத்தளம்.
    • கிளப்பை உருவாக்க அனுமதித்த, நிறுவனத்தில் ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் நபர் கையெழுத்திட்ட அங்கீகாரக் கடிதம். கடிதத்தில் பொறுப்பான நபரின் முழு பெயர் மற்றும் நேரடி தொடர்பு தகவல்கள் (நிறுவன மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி இரண்டும்) இருக்க வேண்டும். எங்களுக்கு நேரடி மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி தேவை, நிறுவனத்தின் பொதுவான மின்னஞ்சல் அல்ல என்பதை நினைவில் கொள்க. மின்னஞ்சல் நிறுவனத்தின் டொமைன் உடன் பொருந்த வேண்டும். அங்கீகாரக் கடிதத்தின் மொழி ஆங்கிலம் அல்லது ஸ்பானிஷ் மொழியில் இல்லையென்றால், அந்த மொழிகளில் ஒன்றுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கடிதம் நோட்டரிஸ் உடன் நமக்குத் தேவைப்படும்.
  • பிற நிறுவனங்களில் உள்ள PIC -ஐ பொறுத்தவரையில்:
    • மேலே சுட்டிக்காட்டப்பட்ட அனைத்து ஆவணங்களும், பின்பு கூடுதலாக:
    • கிளப் பொது சேவை செய்கிறது என்பதை கிளப் நிறுவனர் எப்படி நம்புகிறார் என்பவற்றை விளக்கும் அவர் எழுதிய கடிதம்.
    • கிளப் சந்திக்கும் நிறுவனத்தின் தற்போதைய துணை விதிகள் அல்லது சாசனம், அசல் மொழியில் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்க வேண்டும்.

 

PIC அந்தஸ்து வழங்கப்படவில்லை என்றால் ...

நீங்கள் PIC அந்தஸ்துக்கு விண்ணப்பித்திருந்து, அது வழங்கப்படவில்லை என்றால், உங்களுக்கு பல விருப்பங்கள் உள்ளன:

  • முடிவு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிக்கல்களை நிவர்த்தி செய்து மீண்டும் விண்ணப்பிக்கவும்.
  • தொடர்புடைய கட்டணங்களை செலுத்தி, நிபந்தனைகள் உடைய கிளப்பாக நடத்தவும்.
  • உறுப்பினருரிமை பெறுவதற்கான கட்டுப்பாடுகளை (நிபந்தனைகளை) நீக்கி, கிளப்பை ஒரு பொது கிளப்பாக மாற்றவும்.

PIC அந்தஸ்து வழங்கப்பட்டால் ...

வாழ்த்துக்கள்! Agora வழங்கும் அனைத்து நன்மைகளையும் கிளப் இப்போது இலவசமாக அனுபவிக்கலாம்.

அனைத்து உத்தியோகபூர்வ Agora ஆவணங்களிலும் "PIC" அல்லது "பொது நலன் கிளப்" என்கிற பின்பெயர் கிளப் பெயருடன் சேர்க்கப்படும். (உதாரணமாக, "இம்ப்ராம்ப்ட் ஸ்பீக்கர்ஸ் PIC" அல்லது "Agora Speakers மாட்ரிட் PIC"). PIC என்பதில் C என்ற எழுத்து ஏற்கனவே "கிளப்" என்பதைக் குறிப்பதால், அசல் பெயரில் "கிளப்" என்ற வார்த்தை இடம்பெற்றால், கிளப்பின் பெயர் பெயர் அதற்கேற்ப மாற்றப்படும் ("பெஸ்ட் ஸ்பீக்கர்ஸ் கிளப்" என்பது உங்கள் விருப்பப்படி "பெஸ்ட் ஸ்பீக்கர்ஸ் PIC" அல்லது "பெஸ்ட் ஸ்பீக்கர்ஸ் பொது நலன் கிளப்" என்று மாற்றப்படும்).

பொதுவாக, PIC அந்தஸ்து காலாவதியாகாது, எனவே நீங்கள் எந்த புதுப்பிப்பு செயல்முறைகளை செய்ய வேண்டிய தேவையில்லை. இருப்பினும், PIC அந்தஸ்துக்கு விண்ணப்பிக்கும்போது பயன்படுத்திய ஏதேனும் தகவல் செல்லுபடியாகாது எனில், நீங்கள் புதிய பதிப்பை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, கிளப்பை உருவாக்க அங்கீகரித்த நபர் இனி அந்தக் கிளப்பை நடத்தும் நிறுவனத்தில் பணியாற்றவில்லை என்றால், ஒரு புதிய அதிகாரி கையெழுத்திட்ட புதிய அங்கீகாரக் கடிதம் எங்களுக்குத் தேவைப்படும்.

PIC அமைப்பு துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த, Agora Speakers International எப்போதாவது கிளப்பின் PIC அந்தஸ்தை மதிப்பாய்வு அல்லது தணிக்கை செய்யலாம் மற்றும் கூடுதல் ஆவணங்களை கோரலாம். இணக்கமற்ற ஏதேனும் விஷயங்கள் காணப்பட்டால், அவற்றைத் தீர்க்க கிளப்புக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் வழங்கப்படும். அவை கவனிக்கப்படாவிட்டால், PIC அந்தஸ்து ரத்து செய்யப்படும்.

சந்திப்பு நடைபெறும் வளாகம்

பொது நலன் கிளப்புகள் சந்திப்புகளுக்கு அவை விரும்பும் இடங்களை தேர்வு செய்யலாம், உறுப்பினர்களுக்காக பாகுபாடு பார்ப்பதில் கூடுதல் விஷயமாக செயல்படாத வரை.

 

விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்கள்

பொது நலன் கிளப்புகள் அதன் செயல்பாடுகளை தணிக்கை செய்வதற்கும், அது வழிகாட்டுதல்களை இணங்கி நடக்கிறதா என்பதை சோதிப்பதற்கும் மற்றும் வழிகாட்டும் நோக்கத்திற்காகவும் Agora Speakers International ஃபவுண்டேஷன் உடைய அதிகாரிகள் மற்றும் Agora Speakers International இயக்குநர்கள் குழு உறுப்பினர்களின் வருகையினை, வளாகத்தில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு அதனை ஏற்க வேண்டும்.

PIC கிளப்புகள் தங்கள் சொந்த விருப்பப்படி, Agora தூதர்கள், பிற Agora கிளப் உறுப்பினர்கள் போன்ற பிற அலுவலர்களை பார்வையாளர்களாக ஏற்றுக்கொள்ள தேர்வு செய்யலாம்.

 

நிதி ரீதியான விதிமுறைகள்

பொது நலன் கிளப்பை நடத்தும் நிறுவனம் கிளப்பிற்கான அனைத்து செலவுகளையும் கவனித்துக்கொள்ளும் என்கிற அனுமானத்தால் PIC தங்கள் உறுப்பினர்களிடம் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்படுவதில்லை.

கட்டணம் எதுவும் இல்லை என்பதால், நிதி குறித்து அறிக்கை அளிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

 

பட்டியல் ரீதியான விதிமுறைகள்

பொது நலன் கிளப்புகளைப் பற்றி பின்வரும் தகவல்கள் பகிரப்படுகின்றன, எனவே இவை கிளப் அதிகாரிகளால் புதுப்பித்த நிலையில் வைக்கப்பட வேண்டும்.

 

பகிரப்படும் கிளப் தகவல்
தகவல் வகை பகிரப்படும் விதம்
கிளப்பின் பெயர், எண் மற்றும் சாசன தேதி பொதுவில்
சந்திப்பு அட்டவணை Agora தூதர்கள் மற்றும் Agora ஃபவுண்டேஷன் அதிகாரிகள்
சந்திப்பு நடைபெறும் வளாகம் பொதுவில்
கிளப் அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு தகவல் Agora தூதர்கள் மற்றும் Agora ஃபவுண்டேஷன் அதிகாரிகள்
கட்டண அமைப்பு பொருந்தாது
கிளப் நிதிகள் தனிப்பட்ட முறையில் (Agora மேற்பார்வைக்கு உட்படாமல்)
பார்வையிடுவதற்கான கட்டுப்பாடுகள் பொதுவில்
சொற்பொழிவு உள்ளடக்க கட்டுப்பாடுகள் பொதுவில்
கிளப்பின் தொடர்பு தகவல் பொதுவில்
விருதுகள் மற்றும் பதக்கங்கள் பொதுவில்
கிளப் மொழிகள் பொதுவில்
   

 

Agora கல்வி மாடலை கடைபிடிப்பது

Agora கல்வி மாதிரியை கடைபிடிப்பதை பொறுத்தவரை, பொது நலன் கிளப்புகள் பொது கிளப்புகளின் அதே விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், பின்வரும் விதிவிலக்குகளுடன்:

  • பொது கிளப்புகள் இயற்றக்கூடிய பொது சொற்பொழிவு உள்ளடக்க கட்டுப்பாடுகளுக்கு மேலதிகமாக, பொது நல கிளப்புகள் கூடுதலாக அதில் உறுப்பினர்களாக சேருபவர்கள் விரும்பும் தலைப்புகளுக்கு ஏற்ப சொற்பொழிவில் பேசக்கூடிய விஷயங்களின் தலைப்பை வரைமுறையிடலாம், இந்த வரைமுறைகள் உறுப்பினருரிமை வரைமுறைகளுடன் தெளிவாக தொடர்புடையதாக இருக்கும் வரையில்.
  • உறுப்பினராக சேருவதற்கு தேவையாக திகழுகிற, கிளப்பை நடத்துகிற தொழில்முறை சங்கத்தை அல்லது நிறுவனத்தை விளம்பரப்படுத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்கது. உதாரணமாக, ஒரு கிளப் ACM-ஐ சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு மட்டுமேயானது என்ற நிபந்தனையைக் கொண்டிருந்தால், கிளப்பில் ACM-ஐ விளம்பரப்படுத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்கது.

Contributors to this page: agora and shahul.hamid.nachiyar .
Page last modified on Wednesday November 10, 2021 15:01:07 CET by agora.